மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி | தினகரன்

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி-Provincial Council Delimitation Report-Rejected

 

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அறிக்கைக்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பதோடு, அதற்கு எதிராக 139 பேர் வாக்களித்தனர்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணி, அறிக்கைக்கு ஆதரவாக சபையில் கருத்துகளை தெரிவித்தபோதும், வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

குறித்த அறிக்கை தொடர்பில் இன்று (24) காலை 11.50 முதல் இடம்பெற்ற விவாதத்தை அடுத்து, விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கு சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...