4 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து மரணம் | தினகரன்

4 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து மரணம்

ஹற்றன், மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறானா ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவனின் சடலம் (22)கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹற்றன், ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபித் என்னும் சிறுவனே 22ம் திகதி மாலை 6 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு வெளியே சிறுவன் நின்றுக்கொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காணாமல் போன சிறுவனை தேடியபோது சிறுவனின் காலணி ஆற்றுக்கருகில் இருந்ததை கண்டு ஆற்றுப்பகுதியில் தேடியபோது ஆற்றில் விழுந்துள்ள சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு 100 மீற்றர் தூரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக, ஹற்றன் நீதவானின் மேற்பார்வையின் பின்னர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...