முச்சக்கரவண்டி சாரதிக்கு 35 வயது; யோசனை நீக்கம் | தினகரன்

முச்சக்கரவண்டி சாரதிக்கு 35 வயது; யோசனை நீக்கம்

முச்சக்கரவண்டி சாரதிக்கு 35 வயது; யோசனை நீக்கம்-35 Age Limit for Three Wheeler-Decision Rejected-Cabinet


வாடகை முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கான மிகக் குறைந்த வயதெல்லை 35 ஆக்கப்பட வேண்டுமென, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு வயதுக்கட்டுப்பாட்டை கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறல் என, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய கூட்டத்தின்போதும், அவர் உட்பட அமைச்சர்கள் சிலரால் குறித்த யோசனைக்கு எதிரான காரணங்கள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கருத்தை, அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை முச்சக்கர வண்டி தொடர்பில் அதனை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக, அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், முச்சக்கர வண்டி சாரதிகளாக பணியாற்றுவோருக்கு, வயதெல்லை கொண்டு வருவது அவசியமில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அதற்கமைய, போக்குவரத்து அமைச்சரினால் குறித்த யோசனை மீளப்பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...