9 மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் | தினகரன்

9 மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடத்தப்பட்டதைப் போன்று கலப்பு முறையிலோ அல்லது பழைய முறையிலோ இந்த வருடம் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். 9 மாகாணங்களுக்குமான தேர்தலையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்ததென்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: எதிர்வரும் 24ஆம் திகதி மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 3 மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேலும் 3 மாகாண சபைகள் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் கலைக்கப்படவுள்ளன. அத்துடன் ஏனைய 3 மாகாண சபைகள் அடுத்த வருடம் கலைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...