எயர் இந்தியாவுக்கு கடன் வழங்க அரசு மறுப்பு | தினகரன்

எயர் இந்தியாவுக்கு கடன் வழங்க அரசு மறுப்பு

கடனில் தத்தளித்து வரும் எயர் இந்தியா கேட்ட 30 ஆயிரம் கோடி ரூபா நிதியுதவியை வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

பெரும் கடனில் தத்தளித்து வரும் எயர் இந்தியாவை விற்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடனிலிருந்து மீளவும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவை தொகையை வழங்கவும் எயர் இந்தியாவுக்கு 30 ஆயிரம் கோடி ரூபா கடன் வழங்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சும், மத்திய நிதியமைச்சும் கோரிக்கை விடுத்தது. கடனை வழங்க நிதியமைச்சும் மறுத்துவிட்டது.

இது குறித்து நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், கடந்த முறை கடன் வழங்கப்பட்டபோது, விமான நிறுவனத்தின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக கடன் சுமைதான் அதிகரித்தது விட்டதாக கூறினார். மற்றொறு அதிகாரி ஒருவர், எயர் இந்திய தொழில்நுட்ப சேவை நிறுவனம் மற்றும் எயர் இந்தியா வான் போக்குவரத்து சேவை நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டது. இதன் மூலம் எயர் இந்தியாவின் கடன் சுமை குறையும் என்றார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், மத்திய அரசு விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பில் மட்டுமே அரசு கவனம் செலுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்த ஒரு விமான நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தை கொடுப்பது இந்திய பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...