கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2கோடி நிலத்தை தானமாக வழங்கிய மாணவி | தினகரன்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2கோடி நிலத்தை தானமாக வழங்கிய மாணவி

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக மாணவி ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பாடசாலையில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில்

இந்த தகவல் மாணவி ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்தார். இது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

கடிதத்தை படித்த முதல்-மந்திரி நெகிழ்ச்சியடைந்து பாராட்டினார். நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார்.

மாணவி வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.


Add new comment

Or log in with...