வெள்ளச்சேதங்களை பார்வையிடாமல் ஹெலியில் பத்திரிகை பார்க்கும் குமாரசாமி | தினகரன்

வெள்ளச்சேதங்களை பார்வையிடாமல் ஹெலியில் பத்திரிகை பார்க்கும் குமாரசாமி

கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்களை ஹெலிகொப்டரில் பார்வையிடாமல் முதல்-மந்திரி குமாரசாமி பத்திரிகை படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடகு மாவட்டத்தின் மீது ஹெலிகொப்டர் பறந்து சென்றபோது அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகளும் விமானப்படை ஊழியர்களும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் குமாரசாமி அதை கவனிக்காமல் பத்திரிகை படித்துக்கொண்டு இருந்தார். இதனால் அதிகாரிகளும் விமானப்படையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.


Add new comment

Or log in with...