இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார் | தினகரன்

இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்

நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்.

நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்லீஷ் மற்றும் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா ஆகிய இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுஜாதா குமார். இவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் லீலாவதி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது நிலைமை மோசமடைந்தது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு உயிரிழந்தார்.

இதுபற்றி சுஜாதாவின் இளைய சகோதரியான நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நமது அன்பிற்குரிய சுஜாதா குமார் மரணமடைந்து விட்டார். அவர் கற்பனைக்கு எட்டாத வெற்றிடத்தினை ஏற்படுத்தி விட்டு நம்மை விட்டு சிறந்த இடத்திற்கு சென்று விட்டார். அவர் வாழ்க்கை மீண்டும் திரும்பிடாது என்று அதில் தெரிவித்துள்ளார்.

நடிகை சுஜாதா குமார் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.


Add new comment

Or log in with...