ரூ.1,000 கோடி செலவழித்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது | தினகரன்

ரூ.1,000 கோடி செலவழித்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது

திருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும் யாரும் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை ஆகும். இங்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும் எதிரிகள் வெற்றி பெற முடியாது.

தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பூசல். அது பற்றி நான் இப்போது கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது.

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக ரஜினிகாந்த் முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காமல் இருந்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் என்று சொல்வது விசித்திரமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...