காணமல்போன மீனவர்கள் மீட்கப்பட்டனர் (UPDATE) | தினகரன்


காணமல்போன மீனவர்கள் மீட்கப்பட்டனர் (UPDATE)

படகுகள் இரண்டில் மீன்பிடிக்கச் சென்ற நால்வரை காணவில்லை-4 Person Missing in 2 Fishing Boat

 

மீன்பிடிப்பதற்காக இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்று காணமல்போன நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த படகுகள் புரண்டதன் காரணமாக குறித்த மீனவர்கள் காணமல்போயுள்ள நிலையில், மற்றுமொரு மீனவர் குழுவினால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (18) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த  மீனவர்கள்  சிலாபம் வாயிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். நேற்று பகல் வேளையில் அவர்கள் வீடு திரும்பி இருக்க வேண்டும் எனினும் அன்று மாலை வரை மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், குறித்த மீனவர்களின் குடும்பத்தார் அது தொடர்பாக சிலாபம் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்தே குறித்த மீனவர்கள் வேறொரு படகில் வந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  

(புத்தளம் தினகரன் விசேட நிருபர் - ஜே.எஸ். அப்துல் நமாஸ்)
 


படகுகள் இரண்டில் மீன்பிடிக்கச் சென்ற நால்வரை காணவில்லை (10.12am)

சிலாபம், வட்டக்கல்லி பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று (18) அதிகாலை மீன்பிடி படகுகள் இரண்டில் கடலுக்குச் சென்ற நால்வரை காணவில்லையென, சிலாபம் பொலிசாருக்கு இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

காவட்டியாவத்தை, வட்டக்கல்லி பிரதேசங்களைச் சேர்ந்த 27, 29, 33 வயதுடையோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை சிலாபம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...