சென்னை திரும்பிய விஜயகாந்த் நேராக கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி | தினகரன்

சென்னை திரும்பிய விஜயகாந்த் நேராக கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் தன் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

கடந்த 7 ஆம் திகதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்காவில் இருந்தபடி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தடைந்த விஜயகாந்த், விமான நிலையத்திலிருந்து நேரடியாக மனைவி பிரேமலதாவுடன் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


Add new comment

Or log in with...