விடுதலை கோரி ஆளுநருக்கு எழுதிய கடிதம்: | தினகரன்

விடுதலை கோரி ஆளுநருக்கு எழுதிய கடிதம்:

உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்ய  பேரறிவாளனுக்கு அனுமதி

தங்களை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக ஆளுநருக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தங்களை விடுதலை செய்ய கோரி அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதில் தமிழக ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை 2 வாரத்தில் தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...