ஆண்டிவால் வீதி சூடு தொடர்பில் வேவு பார்த்தவர் கைது | தினகரன்


ஆண்டிவால் வீதி சூடு தொடர்பில் வேவு பார்த்தவர் கைது

ஆண்டிவால் வீதி சூடு தொடர்பில் வேவு பார்த்தவர் கைது-Jul 09-Andival Street Shooting-Suspect Arrested
கிருஷ்ணா என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன்

 

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணி கட்சியின் தலைவருமான கிருஷ்ணா என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 09 ஆம் திகதி, காலை 7.45 மணியளவில், கொழும்பு, செட்டியார்தெரு, ஆண்டிவால் சந்தியிலுள்ள பழக் கடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கிருபானந்தன் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர், இன்று (20) காலை 10.00 மணியளவில் ப்ளூமெண்டல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர், துப்பாக்கிச்சூட்டு தொடர்பில் உளவு பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

33 வயதான குறித்த சந்தேகநபர், இதற்கா பயன்படுத்திய, மோட்டார்சைக்கிளையும் பொலிசார் மீட்டுள்ளனர். கொழும்பு 13, ப்ளூமெண்டல் வீதியில் வசிக்கும் அவர், கொலைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை மற்றும் திட்டமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாளைய தினம் (21) புதுக்கடை, இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புறக்கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...