வெலிக்கடை பெண் கைதிகள் மீண்டும் போராட்டத்தில் | தினகரன்


வெலிக்கடை பெண் கைதிகள் மீண்டும் போராட்டத்தில்

வெலிக்கடை பெண்கைதிகள் மீண்டும் போராட்டத்தில்-Welikada Female Inmates Protest

 

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் மீண்டும் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தங்களை சிறைச்சாலையின் மற்றுமொரு பகுதிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள், இன்று (20) பிற்பகல், இப்போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய பெண் கைதிகள் சிலர், கடந்த வாரம் (13) வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...