உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் 11 பேர் கைது | தினகரன்


உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் 11 பேர் கைது

பகிடிவதை; தாக்குதல்; உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் 11 பேர் கைது-Ragging-Veyangoda SLIATE 11 Students Arrested

 

பகிடிவதையை எதிர்த்த மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் நடாத்திய உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன மாணர்வகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாங்கொட உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாம் வருட மாணவர்கள் இருவர், பகிடி வதையை எதிர்த்தமை காரணமாக குறித்த கல்வி நிறுவனத்தில் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் சிலரால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவர்கள் இருவரும், கம்பஹா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடைய மாணவர்கள் 11 பேரும் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வியாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Add new comment

Or log in with...