போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் இருவர் கைது | தினகரன்

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் இருவர் கைது

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் இருவர் கைது-2 Arrested with Rs 1000-Fake Notes-Anuradhapura-Galenbindunuwewa

ரூ. 70,000 நாணயத்தாள்கள், அச்சு இயந்திரம் மீட்பு

சட்டவிரோதமான முறையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டுவந்த, இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்திலுள்ள துருணேகல கொலணியில் வசிக்கும் 20, 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கலன்பிந்துனுவெவ பொலிசார் தெரிவித்தனர்.

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் இருவர் கைது-2 Arrested with Rs 1000-Fake Notes-Anuradhapura-Galenbindunuwewa

குறித்த பிரதேத்திலுள்ள வீட்டில் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவதாக கலன்பிந்துனுவெவ பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனையின்போது, சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி நாணயத்தாள்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் இருவர் கைது-2 Arrested with Rs 1000-Fake Notes-Anuradhapura-Galenbindunuwewa

இதன்போது அங்கு ஹெரோயின் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிசார், ரூபா 1,000 பெறுமதியான போலி நாணயத்தாள்கள் ரூபா 70,000, அதனை அச்சிட பயன்படுத்திய அச்சு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் இருவர் கைது-2 Arrested with Rs 1000-Fake Notes-Anuradhapura-Galenbindunuwewa

குறித்த ஆயிரம் ரூபா தாள்,  S|206 510942 எனும் இலக்கத்தை கொண்டது என தெரிவித்த பொலிசார், சந்தேகநபர்களால் மிக நீண்ட நாட்களாக போலி நாணயத்தாள் அச்சிடும் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

கலன்பிந்துனுவெவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(படங்கள்: கெபிதிகொல்லாவ குறூப் நிருபர் - எஸ்.ஜீ. உபேபொல)

Add new comment

Or log in with...