பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு | தினகரன்

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு-Imran Khan sworn in as Pakistan’s 22nd Prime Minister

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய தெஹ்ரீக்-ஈ-இன்சாப்f கட்சியின் தலைவருமான இம்ரான் கான், பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இன்று (18) இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மம்னூன் ஹுஸைனின் முன்னிலையில் இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தில், அவர் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிபி, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்து, வசீம் அக்ரம், ரமீஸ் ராஜா, இடைக்கால பிரதமராக கடமையாற்றிய நஸீர் உல் முல்க், PTI கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு-Imran Khan sworn in as Pakistan’s 22nd Prime Minister

கடந்த ஜூலை 25 ஆம் திகதி இடம்பெற்ற பாகிஸ்தானின் 15 ஆவது பாராளுமன்ற தேர்தலை அடுத்து, அதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுக்கு அமைய, பிரபல போட்டி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (PML-N) கட்சியை விட அதிக ஆசனங்களை பெற்றதன் மூலம் PTI கட்சி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு-Imran Khan sworn in as Pakistan’s 22nd Prime Minister

மொத்தமான 342 ஆசனங்களில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 172 ஆசனங்களை பெற வேண்டிய நிலயில், இம்ரான் கானின் PTI கட்சி  116 ஆசனங்களை பெற்றதோடு, பிரதான எதிர்க்கட்சியான PML-N கட்சி 64 ஆசனங்களையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிலாவல் பூட்டோ சர்தாரி) (PPP) 43 ஆசனங்களையும் பெற்றது.

342 பேரைக்கொண்ட பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான 172 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், நேற்று (17) வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இம்ரான் கானுக்கு ஆதரவாக 176  வாக்குகள் கிடைத்ததோடு,  PML-N கட்சியின் தற்போதைய தலைவரும் நவாஸ் ஷரீபின் சகோதரருமான ஷெபாஷ் ஷரீபிற்கு 96 வாக்குகள் மாத்திரம் கிடைத்தது.

அதற்கமைய, PTI கட்சி ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அதனடிப்படையிலேயே அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் இன்று (18) பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார்.

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு-Imran Khan sworn in as Pakistan’s 22nd Prime Minister

இந்நிழ்வில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் அமைச்சருமான, நவ்ஜோத் சிங் சித்து நேற்றையதினம் (17) பாகிஸ்தான் சென்றடைந்தார். தான் ஒரு அரசியல்வாதியாக இந்நிகழ்வில் கலந்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...