ஹட்டன் வீதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம் | தினகரன்


ஹட்டன் வீதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம்

ஹட்டன் வீதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம்-Landslide Hatton-Nuwara Eliya Road Blocked

 

தொடர் மழை; சாரதிகளுக்கு எச்சரிக்கை

மலையகத்தில் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவ, நுவரெலியா, மஸ்கெலியா போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியான அடை மழை காரணமாக இன்று (18) மாலை ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், தலவாக்கலை சென். கிளாயர் பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதோடு, பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்துமிடமும் சேதமாகியுள்ளது.

ஹட்டன் வீதியில் தொடர்ந்து மண்சரிவு அபாயம்-Landslide Hatton-Nuwara Eliya Road Blocked

இப்பிரதான வீதியினூடான போக்குவரத்து, ஒருவழி போக்குவரத்தாகவே இடம்பெற்று வருகின்றது. எனினும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மண்சரிவுகள் பதிவாகிய வண்ணமே உள்ளன.

ஹட்டன் வீதியில் தொடர்ந்து மண்சரிவு அபாயம்-Landslide Hatton-Nuwara Eliya Road Blocked

இதனால் நுவரெலியா, ஹட்டன் செல்வோர் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

ஹட்டன் வீதியில் தொடர்ந்து மண்சரிவு அபாயம்-Landslide Hatton-Nuwara Eliya Road Blocked

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 


Add new comment

Or log in with...