ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் 20 இல் இலங்கை வருகை | தினகரன்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் 20 இல் இலங்கை வருகை

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, (Itsunori Onodera) நாளை மறுதினம் 20ஆம் திகதி இலங்கைக்கு

விஜயம் செய்யவுள்ளார். அவர் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரொருவர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.

அமைச்சர் ஒனோடெரா இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுடன் ஜப்பான் இலங்கை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை நடத்தவுள்ளதுடன் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு கொழும்புக்கு வெளியிலும் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான 'விரிவான பங்களிப்பு’ மேலும் வலுப்பெறுவதற்கு இந்த விஜயம் உறுதுணையாக அமையும் என ஜப்பானிய தூதரகம் எதிர்பார்க்கின்றது.

 

 


Add new comment

Or log in with...