மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார் | தினகரன்

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகர்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (16) காலமானார்.

நீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

மூன்று முறை பிரதமர்

  • 1996:13 நாட்கள்
  • 1998-1999
  • 1999-2004

9 முறை லோக்சபா உறுப்பினர்
2 முறை ராஜ்யசபா உறுப்பினர்

1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1942 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர இந்துத்துவா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957 ஆம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து இன்றைய பா.ஜ.க.வுக்கு முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங் எம்.பி.யாக முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

9 முறை லோக்சபா, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தார். 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறை சென்ற அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார். 1970 களில் பாரதிய ஜன சங், ஜன சங்கமானது. பின்னர் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி உதயமானது ஜனசங்கமும் அதில் சங்கமமானது. அப்போது 1970 களின் இறுதியில் அமைக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார் வாஜ்பாய்.

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

பின்னர் ஜனதா கட்சி உடைந்து, பாரதிய ஜனதா கட்சி உதயமானது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார் வாஜ்பாய். காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக பாஜக வளரத் தொடங்கியது. இந்தியாவின் 10 ஆவது பிரதமராக 1996 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். 1999 இல் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இந்த வெற்றிகளின் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகள் அறியச் செய்தார்.

பாகிஸ்தானுடனான நல்லுறவை ஏற்படுத்த பேருந்து போக்குவரத்து, அமைதி பேச்சு வார்த்தை என பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார். ஆனாலும், கந்தகார் விமான கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், குஜராத் இனக்கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன.

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

2004 ஆம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த 2002 இல் குஜராத்தில் கோத்ரா படுகொலைகள் நடைபெற்றபோது மோடி அங்கே முதல்வராக இருந்தார். அப்போது, யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது பெரும் பாராட்டைப் பெற்றது.

மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்-3 times indian PM Atal Bihari Vajpayee Passed Away

நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மரபுகளை புறந்தள்ளி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய்.

சமீபத்தில்தான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை தேசம் இழந்தது. இப்போது இன்னொரு முக்கிய அரசியல் பிதாமகரான வாஜ்பாயை நாடு இழந்துள்ளது.
 
Add new comment

Or log in with...