முன்னாள் கடற்படை அதிகாரி 'நேவி சம்பத்' விளக்கமறியலில் | தினகரன்


முன்னாள் கடற்படை அதிகாரி 'நேவி சம்பத்' விளக்கமறியலில்

முன்னாள் கடற்படை அதிகாரி 'நேவி சம்பத்' விளக்கமறியலில்-Navi Sampath Alias Chandana Prasad Hettiarachchi Remanded Till Aug 29

 

கடந்த 2008 இல் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின் சந்தேகநபரான, 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (13) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

41 வயதான சந்தேகநபர், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர், வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, கைதாகும்போது அவரிடம், பொல்வத்த கால்லகே அசோக எனும் பெயருடனான போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையொன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

நேற்றுமுன்தினம் (13) கைதான அவர், நேற்று (14) கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை இன்று (15) வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, அவரை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...