Thursday, March 28, 2024
Home » மண்மேடு சரிந்ததால் தரையில் வீழ்ந்த மின்கம்பம்

மண்மேடு சரிந்ததால் தரையில் வீழ்ந்த மின்கம்பம்

by sachintha
November 24, 2023 12:05 pm 0 comment

கடும் மழை காரணமாக காவத்தை நகர பிரதான வீதியில் மின் கம்பத்துடன் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மண்மேடு மற்றும் மின்சார கம்பம் சரிந்து காவத்தை பிரதான வீதியில் வீழ்ந்தமையால் காவத்தை வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தன. எம்பிலிபிட்டிய, இரத்தினபுரி, எந்தானை, பெல்மதுளை, நிவித்திகலை உட்பட பல இடங்களுக்குச் செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்தனர். இதனால் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT