காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி | தினகரன்

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி-Afghanistan Kabul Education Center Kabul Attack-34 Killed

 

தமக்கு தொடர்பு இல்லையென தலிபான் அறிவிப்பு

காபூல் கல்வி நிலையத்தின் வகுப்பறை ஒன்றில்இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (15) ஆப்கானிஸ்தானின் காபுல் நகரின் மேற்கு பகுதியிலுள்ள பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையத்திலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பில் சிக்கி 48 பேர் பலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபோதும், பின்னர் அவ்வெண்ணிக்கை 34 என, அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக இன்று (16) அல்ஜெஸீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி-Afghanistan Kabul Education Center Kabul Attack-34 Killed

குறித்த தாக்குதலை அடுத்து, ஆப்கான் பாதுகாவலர்களால் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டதாகவும், இத்தாக்குதலில் ஈடுபட பலர் வந்திருக்கலாம் எனும் அச்சத்திலேயே அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் குறித்த தாக்குதல் ஒரேயொரு நபரினாலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி-Afghanistan Kabul Education Center Kabul Attack-34 Killed

"கால்நடையாக வந்த குறித்த தற்கொலைதாரி, கல்வி நிலையத்தினுள் தன்னைத்தானே வெடிக்கச் செய்து தாக்குதலை மேற்கொண்டதை தங்களால் உறுதிப்படுத்த முடிகின்றது" என அந்நாட்டு பொலிஸ் பேச்சாளர் ஹஸ்மத் ஸ்தானிக்ஸாய் (Hashmat Stanikzai) தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஷ்த்-ஈ-பர்ச்சி (Dasht-e-Barchi) எனும் ஷியா பகுதியில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது.

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி-Afghanistan Kabul Education Center Kabul Attack-34 Killed

இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பங்குபற்றும் பாடநெறியொன்றை குறிவைத்தே தாக்குதல்தாரி தாக்குதலை நடாத்தியுள்ளதாக, ஷியா சமூக தலைவரான, அப்துல் ஹொஸைன் ஹொஸைன்சாதா (Abdul Hossain Hossainzada) தெரிவித்துள்ளார்.

இத்தாகுதலுட் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லையென தலிபான் அமைப்பின் பேச்சாளர், ஷபிஹுல்லாஹ் முஜாஹித் (Zabihullah Mujahid) மறுப்பு வெளியிட்டுள்ள நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக எவ்வித அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி-Afghanistan Kabul Education Center Kabul Attack-34 Killed

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி விடுத்துள்ள செய்தியில் இத்தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக, தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், கலாசார நிலையங்கள் மீது இதே மாதிரியான தாக்குதல்களை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்த, 'ஈராக் மற்றும் வளைகுடா இஸ்லாமிய அரசு' என அழைக்கப்டும் ஐஎஸ் (ISIL) குழுவை ஷியா மதகுரு சபையின் உறுப்பினரான, ஜவாத் கவாரி (Jawad Ghawari) சாடியுள்ளார்.

காபூல் கல்வி நிலைய தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி-Afghanistan Kabul Education Center Kabul Attack-34 Killed

கடந்த இரு வருடங்களில் காபூலில் மாத்திரம், ஷியா சமூகத்தின் மீது குறைந்தது 13 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கவாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது குறிப்பாக இளம் சிறார்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமான, தங்கள் மீதான மக்களின் எதிர்ப்பை குறைக்கும் பொருட்டு, தலிபான் அமைப்பானது, ஐஎஸ் (ISIL) குழுவின் பெயரை தங்களது தாக்குதல்களில் பயன்படுத்துவதாக தாம் சந்தேகப்படுவதாக, ஆப்கானிஸ்தான் 1TV தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் அப்துல்லாஹ் கென்ஜானி (Abdullah Khenjani) கருத்து வெளியிட்டுள்ளார்.

"பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இருந்த குறித்த வகுப்பறையில் எத்தனை பேர் இருந்தார்கள் என சரியாக கூற முடியவில்லை, ஆயினும் வகுப்பறை நிறைந்து காணப்பட்டுள்ளது" என, கென்ஜானி தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...