இளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு | தினகரன்

இளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு

இளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு-33 Yr Old Mother and 4 Yr Son Dead Bodies Found in a Well at Vavuniya

வவுனியா கூமாங்குளம் பகுதியில் சம்பவம்

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து 33 வயதான இளம் தாயும் அவரது 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள வீடு ஓன்றின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு-33 Yr Old Mother and 4 Yr Son Dead Bodies Found in a Well at Vavuniya

கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிப்பவர் தெரிவிக்கையில், "எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார். இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர். இதன்போது வீட்டில் இருந்த ரொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் நிற்கும் போது நான் அருகிலுள்ள கடைக்குச் சென்று விட்டேன். பின்னர் 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன். அப்போது அவர்களை காணவில்லை. சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 09 வயது சிறுவன் அம்மா நிற்கிறாவா என தேடி வந்தான். இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக கிடந்ததை கண்டோம்" எனத் தெரிவித்தார்.

இளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு-33 Yr Old Mother and 4 Yr Son Dead Bodies Found in a Well at Vavuniya

சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பண்டாரிக்குளம் பொலிசார், மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு-33 Yr Old Mother and 4 Yr Son Dead Bodies Found in a Well at Vavuniya

சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரதேச பரிசோதனைக்காக சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா தலைமையக பொலிசாரின் தலையீட்டுடன், குற்ற தடயவியல் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Add new comment

Or log in with...