நேருவுக்குப் பின்னர் அதிக நேரம் பேசிய பிரதமர் மோடி | தினகரன்

நேருவுக்குப் பின்னர் அதிக நேரம் பேசிய பிரதமர் மோடி

2022 இற்குள் இந்தியர்கள் விண்வெளிக்குப் பயணம்

இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நேற்றாகும். பிரதமர் நரேந்திர மோடி நேற்று செங்கோட்டையில் 5வது முறையாக தேசியக் கொடியேற்றினார். தேர்தலுக்கு முந்திய சுதந்திர தின உரை என்பதால், பிரதமர் பல்வேறு வகையான அம்சங்களை தனது உரையில் குறிப்பிட்டார். அவர் 80 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

தீவிரவாதம் என்ற சொல்லை தனது உரையில், 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை உச்சரிக்கவில்லை. கடந்த ஆண்டு, 8 முறை தீவிரவாதம் என்ற வார்த்தையை மோடி பயன்படுத்தினார். இவ்வாண்டு 3 முறை மோடி இந்த வார்த்தையை உச்சரித்தார்.

வேலைவாய்ப்பு என்ற வார்த்தையை, 2014இலும், 2016இலும் 7 முறை மோடி பயன்படுத்தினார். 2015 மற்றும் 2017ம் ஆண்டில் அதை மோடி குறிப்பிடவில்லை. இவ்வாண்டு உரையில் ஒருமுறை பயன்படுத்தினார்.

விவசாயி என்ற வார்த்தையை 2014இல் 6 முறையும், 2015இல் 23 முறையும், 2016இல் 31 முறையும், கடந்த வருடம் 19 முறையும், இவ்வாண்டு 14 முறையும் மோடி உச்சரித்தார்.

ஏழ்மை என்ற வார்த்தையை, 2014இல் 29 முறை பயன்படுத்தினார் மோடி. 2015இல் 44 முறையும், 2016இல் 27 முறையும், 2017இல் 17 முறையும் இவ்வாண்டு 39 முறையும் பயன்படுத்தினார் மோடி. காஷ்மீர் என்ற வார்த்தை, முதல் மூன்று சுதந்திர உரைகளில் இடம்பெறவில்லை. கடந்த மற்றும் இவ்வாண்டு உரையில் தலா 7 முறை பயன்படுத்தியுள்ளார் மோடி.

கறுப்புப் பணம் என்ற வார்த்தை முதல் மூன்று உரைகளில் இல்லை. கடந்த வருடம் 6, இவ்வருடம் 2 முறை மோடியால் உச்சரிக்கப்பட்டது. ஊழல் என்ற வார்த்தை, 2014இல் பயன்படுத்தப்படவில்லை. 2015இல் 19, 2016 மற்றும் 2017ம் ஆண்டில் தலா 4 முறை, இந்த வருட சுதந்திர தின உரையில் 3 முறை மோடி இதைப் பயன்படுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

370 ஆண்டுகள் ப​ைழமை வாய்ந்த டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

கொடியேற்றிய பின்னர் அவர் தனது 5- வது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்களின் உரிமையைக் காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். 2022இற்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் நிறைவேற்றப்படும். அதாவது இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

"2014இல் நம்மைப் பார்த்து சிரித்தவர்கள் ஏராளம். தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த போது கைகொட்டி சிரித்தார்கள், ஆனால் இன்று அந்த தூய்மை இந்தியா திட்டம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது" என்றார் மோடி.பாரதியார் கவிதையை தமிழில் வாசித்தபடி மேற்கோள்காட்டி பேசினார் நரேந்திர மோடி.

எல்​ேலாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார்' என்று அவரது கவிதையை மேற்கோள்காட்டி பேசினார். பாரத சமுதாயம் வாழ்கவே என்ற பாடலில்தான் மோடி சுட்டிக் காட்டிய வரி இடம்பெறுகிறது. பாரதியாரின் உணர்ச்சிமிக்க தேச பக்திப் பாடலில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 14 பிரதமர்களை சந்தித்துள்ள நிலையில் அவர்களுள் இரு பிரதமர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை.

இந்தியா கடந்த 1947-ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15-ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. இதற்காக ஏராளமானவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் இந்த 72 ஆண்டுகளில் 14 பிரதமர்கள் ஆட்சி செய்துவிட்டனர். அவர்களுள் பின்வருவோர் பிரதமராக இருந்துள்ளனர்.

1. ஜவஹர்லால் நேரு, குல்சாரி லால் நந்தா (பொறுப்பு), 2. லால் பகதூர் சாஸ்திரி, 3. இந்திரா காந்தி, 4. மொர்ஜி தேசாய், 5. சரண் சிங், 6.ராஜீவ் காந்தி, 7. வி.பி. சிங், 8. சந்திரசேகர், 9. பி.வி. நரசிம்மராவ், 10. அடல்பிகாரி வாஜ்பாய், 11. தேவெகௌடா, 12. ஐ.கே. குஜ்ரால், 13. மன்மோகன் சிங், 14. நரேந்திர மோடி

இவர்களுள் அதிக முறை செங்கோட்டையில் கொடியேற்றியவர் நேரு ஆவார். இவர் 17 முறை கொடியேற்றியுள்ளார். 16 முறை கொடியேற்றி இரண்டாவது இடத்தில் இந்திரா காந்தி உள்ளார். சரண் சிங், வி.பி. சிங், தேவெகௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் மிகவும் குறைந்த பட்சமாக ஒரு முறை மட்டுமே கொடியேற்றியுள்ளனர். இந்த 14 பேரில் குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திர சேகர் ஆகியோர் ஒரு முறை கூட கொடியேற்றியது இல்லை. இவர்களில் குல்சாரிலால் கடந்த 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் திகதி முதல் ஜூன் 9-ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு மட்டுமே (பொறுப்பு) பிரதமராக இருந்தார்.

அதுபோல் சந்திரசேகர் கடந்த 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் திகதி முதல் 1991-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் திகதி வரை 223 நாட்கள் பிரதமராக இருந்தார். குல்சாரிலால் நந்தா பொறுப்பு பிரதமர் பதவி மட்டுமே வகித்ததாலும் சந்திரசேகர் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததாலும் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருவரும் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததால் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

1947- இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் கொண்ட நீண்ட உரையை ஆற்றினார். இந்த உரைதான் கடந்த 2015-ஆம் ஆண்டு வரை மிக நீண்ட உரையாக இருந்தது. அதை 86 நிமிடங்களாக பேசி சாதனை செய்தார் மோடி.

2002-இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் 30 நிமிடங்களில் தனது சுதந்திர தின உரையை வாசித்தார்.

2005-இல் பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங், 50 நிமிட உரையை நிகழ்த்தினார்.

2014-இல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது முதல் 65 நிமிடம் உரையாற்றினார்.

2015-ஆம் ஆண்டு வரை மிக நீண்ட உரையாக இருந்தது. அதை 86 நிமிடங்களாக பேசி சாதனை செய்தார் மோடி.

2018-ஆம் ஆண்டு மோடி ஆற்றிய சுதந்திர தின உரை 80 நிமிடங்கள் ஆகும். நேருவுக்கு பிறகு இதுவரை எந்த பிரதமரும் இந்த அளவுக்கு பேசியதில்லை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆற்றிய சுதந்திர தின உரைகளில் கடந்த ஆண்டு 57 நிமிடங்கள் பேசியதே மிகவும் குறைவான கால அளவாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு 96 நிமிடங்களில் அவர் ஆற்றிய உரைதான் சுதந்திர தினத்தில் பிரதமர்கள் ஆற்றிய உரைகளில் நீளமானதாகும்.

சுதந்திர தினத்துக்கு முந்தைய மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தன்று தனது உரை மிகவும் நீளமாக இருப்பதாக கடிதங்கள் வந்துள்ளதால் இனி குறுகிய உரைகளை அளிக்கவுள்ளேன் என்றார் மோடி.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு காலத்தில் ஆற்றிய சுதந்திர தின உரைகளுள் 50 நிமிடங்கள் ஆற்றியதே நீளமானதாகும்.


Add new comment

Or log in with...