தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 2 ஆம் தவணை விடுமுறை | தினகரன்

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 2 ஆம் தவணை விடுமுறை

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 2 ஆம் தவணை விடுமுறை-Tamil Sinhala School Closed for 2nd Term Holiday

 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் (03) நிறைவடைகிறது.

அதற்கமைய, இன்று (03) வெள்ளிக்கிழமை 02 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் இப்பாடசாலைகள், எதிர்வரும் செப்டெம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை 03 ஆம் தவணைக்காக திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் யாவும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்படவுள்ளதோடு, மீண்டும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...