சுதந்திர தின சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி | தினகரன்


சுதந்திர தின சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கேகே நகர் விநாயகர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 449 திருக்கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அரசு ஏற்பாடு செய்தது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு, திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

 அதன்படி நேற்று கோவில்களில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் வீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதேபோல் பிற பகுதிகளில் நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Add new comment

Or log in with...