33 அணைகள் திறந்ததால் வெள்ளக்காடானது கேரளா | தினகரன்

33 அணைகள் திறந்ததால் வெள்ளக்காடானது கேரளா

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். 58 அணைகளில் 33 அணைகளில் தண்ணீர் திறப்பால் கேரளா முழுவதும் வெள்ளக்காடானது. சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

கேரளாவில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதத்தை முதற்கட்டமாக கணக்கிட்டதில் சுமார் 8,316 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் வீடுகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் இன்று தொடங்குகிறது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த பண்டியை அரசின் சார்பாக பல இடங்களில் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அரசின் சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டியை ரத்து செய்யப்பட்டு அந்த பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் என பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...