அமெரிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் ஒப்புதல் | தினகரன்

அமெரிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் ஒப்புதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு அணுகுமுறைகளை மேம்படுத்த இராணுவத்திற்கு பல பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜோன் எஸ். மக்கைன் தேசிய பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு 716 பில்லியன் டொலர் தொகையை அளித்தார்.

நவீன வரலாற்றில், இராணுவம் மற்றும் போர்க்காலத் திறன்களின் பேரில் செய்யப்படும் மிக முக்கியமான முதலீடு இது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் தமது வளர்ச்சிக்கு மிகப் பெரிய மிரட்டலாகக் கருதி வருவதை, ஜனாதிபதி டிரம்பின் இந்தச் செயல் புலப்படுத்துகிறது.

மேலும், இந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்கா, வட கொரியா சார்ந்த அணுவாயுத மிரட்டலையும் முறியடிக்க முற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்கத் பாதுகாப்புச் செயலகம், தென் கொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை 22 ஆயிரத்திற்கும் குறைவாகக் குறைக்க முடியாது.

தற்போது, அங்கு 28 ஆயிரம் அமெரிக்க இராணுவத் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...