எரிபொருளுக்கான மானியத்தை நிறுத்த வெனிசுவேலா திட்டம் | தினகரன்

எரிபொருளுக்கான மானியத்தை நிறுத்த வெனிசுவேலா திட்டம்

வெனிசுவேலாவில் மில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தும் எரிபொருள் கடத்தலை தடுக்க எண்ணெய் மானிய விலையை அதிகரிக்க வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ குறிப்பிட்டுள்ளார்.

“கொலம்பியா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கு கடத்தப்படுவதை நிறுத்த எரிபொருள் சர்வதேச விலைக்கு விற்கப்பட வேண்டும்” என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய மடுரோ குறிப்பிட்டார்.

ஏனைய பல எண்ணெய் உற்பத்தி நாடுகள் போன்று வெனிசுவேலாவும் நாட்டு மக்களுக்கு மானிய விலையிலேயே எரிபொருட்களை விற்கிறது. இது கடத்தல்காரர்கள் எரிபொருளை அண்டைய நாடுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வெனிசுவேலாவில் பணவீக்கம் ஒரு மில்லியன் வீதத்தை எட்டியிருந்தபோதும் அந்த நாட்டில் எண்ணெய் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அங்கு ஒரு கோப்பி கோப்பையின் விலைக்கு சிறு கார் வண்டி ஒன்றுக்கு 9,000 தடவைகள் பெட்ரோல் நிரப்ப முடியும் என்று உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலேயே எரிபொருள் மானியத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...