பெண்சிறைக் கைதிகளின் போராட்டம் நேற்று முடிவு | தினகரன்


பெண்சிறைக் கைதிகளின் போராட்டம் நேற்று முடிவு

 

கூரையிலிருந்து கீழே இறங்கி அதிகாரிகளுடன் பேச்சுவாரத்தை

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறி இரண்டு தினங்களாகப் போராட்டம் நடத்திய பெண் சிறைக்கைதிகள் அனைவரும் நேற்று இரவு 7.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கூரையிலிருந்து இறங்கியுள்ளனர்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் நேற்று மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்குமாறு கேட்டதற்கிணங்க இவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதிகாரிகளின் கோரிக்கையை ஆரம்பத்தில் ஏற்காது அடம்பிடித்த கைதிகள், கூரையிலிருந்து இறங்கினாலே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அதிகாரிகள் தெவித்ததால் கைதிகள் அனைவரும் கூரையை விட்டு கீழே இறங்கி வந்தனர். இதையடுத்து அமைச்சின் அதிகாரிக ளுடன் ஐந்து பெண்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் .

போராட்டத்தில் ஈடுபடும் பெண் சிறைக் கைதிகள் தமது போராட்டங்களைக் கை விட்டதன் பின்னர் நீதி மற்றும் சிறைச்சாலை பெண்சிறைக் கைதிகளின்...

மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரியொருவர் இவர்களது பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

இந்த நிலையிலேயே நேற்று இரவு அமைச்சின் அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து சிறைக் கைதிகளிடன் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.


Add new comment

Or log in with...