ஸ்டாலினை வெல்ல ஒரு கொம்பனும் இல்லை | தினகரன்

ஸ்டாலினை வெல்ல ஒரு கொம்பனும் இல்லை

 பெரியார், அண்ணா, கருணாநிதி என மூன்று இதயங்களைக் கொண்டவர் மு.க. ஸ்டாலின் என்று திமுக செயற் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் கூறினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து, அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தலைவராகவுள்ள செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களே என்று தனது பேச்சைத் தொடங்கினார். பெரியார், அண்ணா, கருணாநிதி என மூன்று இதயங்களைக் கொண்டவர் மு.க. ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களையும் வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி, தனக்குப் பின், திமுகவை வழிநடத்த மு.க. ஸ்டாலின் எனும் ஆலவிழுதை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை திமுக தலைவர் கருணாநிதியே எனக்குக் கற்பித்தார்.


Add new comment

Or log in with...