Friday, March 29, 2024
Home » கிழக்கு ஆளுநர் செந்தில் தாய்லாந்து பயணம்
உலக ஹிந்து காங்கிரஸ் மாநாடு

கிழக்கு ஆளுநர் செந்தில் தாய்லாந்து பயணம்

by sachintha
November 24, 2023 7:08 am 0 comment

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான உலக ஹிந்து காங்கிரஸ் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துகொள்ளவுள்ளார்.

இன்று (24) முதல் 26ஆம் திகதிவரை தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இம்மாநாடு நடைபெறவுள்ளதுடன், தாய்லாந்துக்கு நேற்று ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, கென்யா, கட்டார் போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அரசியல் தலைமைகள், பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT