Only T20 - SLvSA: இலங்கை 3 விக்கெட்டுகளால் வெற்றி (UPDATE) | தினகரன்

Only T20 - SLvSA: இலங்கை 3 விக்கெட்டுகளால் வெற்றி (UPDATE)

 Only T20 - SLvSA: இலங்கை  விக்கெட்டுகளால் வெற்றி- Only T20 - SLvSA-Sri Lanka won by wickets


சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில், கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (14) இரவு இடம்பெற்ற ரி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட்டுகளால்  வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி  சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதனையடுத்து, 99 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்க அணியை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும், இலங்கை அணி சார்பில், தினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும், தசுன் சானக 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அந்த வகையில், இச்சுற்று தொடரில், டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2 - 0 எனவும், ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3 - 2 எனவும் வெற்றி கொண்ட நிலையில், ஒரே ஒரு போட்டியை கொண்ட ரி20 போட்டியை இலங்கை அணி வெற்றி கொண்டுள்ளது.

தென்னாபிரிக்கா 98/10 (16.4)
குயின்டன் டி கொக் 20 (11)
றீஷா ஹென்ரிக்ஸ் 19 (16)
ஹென்ரிக் க்ளசென் 18 (16)

லக்ஷான் சந்தகன் 3/19 (4.0 ov)
அகில தனஞ்சய 2/15 (4.0 ov)
தனஞ்சய டி சில்வா 2/22 (4.0 ov)

இலங்கை 99/7 (16.0)
தினேஷ் சந்திமால் 36 (33)
தனஞ்சய டி சில்வா 31 (26)
தசுன் சானக 16 (16)

ககிசோ ரபடா 2/24 (4.0 ov)
ஜூனியர் டாலா 2/22 (4.0 ov)
தப்ரீஸ் ஷம்ஸி 2/26 (4.0 ov)


Only T20 - SLvSA: தென்னாபிரிக்கா 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு (UPDATE) 8.41pm 

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான, கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறும் (14) ரி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி  சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறிய தென்னாபிரிக்க அணி, 98 எனும் மிகக் குறைவான ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில், விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் 20 ஓட்டங்களையும், றீஷா ஹென்ரிக்ஸ் 19 ஓட்டங்களையும், ஹென்ரிக் க்ளசென் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய, லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித, இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 99 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.

தென்னாபிரிக்கா 98/10 (16.4)
குயின்டன் டி கொக் 20 (11)
றீஷா ஹென்ரிக்ஸ் 19 (16)
ஹென்ரிக் க்ளசென் 18 (16)

லக்ஷான் சந்தகன் 3/19 (4.0 ov)
அகில தனஞ்சய 2/15 (4.0 ov)
தனஞ்சய டி சில்வா 2/22 (4.0 ov)

Only T20 - SLvSA: தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாட தீர்மானம் 6.51pm

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான, ஒரேயொரு ரி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (14) இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 2 - 0 என்ற வெற்றி கொண்டதோடு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, தென்னாபிரிக்க அணி 3 - 2 என வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இன்று இடம்பெறும் ஒரேயொரு ரி20 போட்டியில் வெற்றி பெற  இரு அணிகளும் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் என நம்பப்படுகிறது.

இலங்கை அணி: அஞ்சலோ மெத்திவ்ஸ், குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தசுன் சானக, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், இசுரு உதான

தென்னாபிரிக்கா அணி: ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக் (வி.கா), றீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிக் க்ளசென், ஜீன்-போல் டுமினி, டேவிட் மில்லர், அன்டைல் பெஹலுக்வாயோ, ககிசோ ரபடா, ஜூனியர் டலா, லுங்கி கிடி, தப்ரீஸ் ஷம்ஸி
 


Add new comment

Or log in with...