ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளுக்கிடையில் சண்டை; நால்வர் காயம் (UPDATE) | தினகரன்


ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளுக்கிடையில் சண்டை; நால்வர் காயம் (UPDATE)

வெலிக்கடை பெண் கைதிகள் கூரையின் மேலேறி ஆர்ப்பாட்டம்-Welikada Female Inmates Protest at Roof Top

 

வெலிக்கடை சிறைச்சாலை கூரையின்  மேலேறி  போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கைதிகளிடையே போதைப்பொருள் தொடர்பில் கைதானவர்களே    அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  எவ்வாறான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் உரிய முறையின் அடிப்படையிலேயே, தீர்வுகள் எட்டப்படும் என, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.


வெலிக்கடை பெணபெண் கைதிகள் கூரையின் மேலேறி ஆர்ப்பாட்டம் 9.47pm

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது வழக்குகளை விரைவாக முடிக்குமாறும், தங்களுக்கு உரிய வசதிகள் கிடைக்கவில்லை, தங்களுக்கு பிணை வழங்குமாறு தெரிவித்தும் அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 15 பெண் கைதிகள் இவ்வாறு கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...