ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை | தினகரன்


ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை

ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை-Surgery to Gnanasara Thero

 

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (06) ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில், 6 வருடம் ஒத்தி வைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர், சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...