ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள் | தினகரன்

ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்

ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்-9 Goat Killed by Stray Dogs

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளன.

நேற்று (13) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஆடுகளே இவ்வாறு பலியாகியுள்ளன.

ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்-9 Goat Killed by Stray Dogs

குறித்த ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு (ரூபா 180,000) மேல் வரும் என்று  கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்-9 Goat Killed by Stray Dogs

இதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40 இற்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது  இரைக்கு பயன்படுத்தி உள்ளமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்-9 Goat Killed by Stray Dogs

இது தொடர்பில் பொலிஸார் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியம் எந்த பயனும் கிடைக்கவில்லை என கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்-9 Goat Killed by Stray Dogs

தற்போது நிலவும் வரட்சி மற்றும் உணவின்மை காரணமாக, நாய்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்-9 Goat Killed by Stray Dogs

(எஸ்.என். நிபோஜன்)

Add new comment

Or log in with...