முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் | தினகரன்

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார். கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நேற்று காலமானார். அவருக்கு வயது 89. பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (89). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் நேற்றுக் காலை 8.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

10 முறை எம்பியாக பதவி வகித்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...