வாத்துவ ஹோட்டல் சம்பவம்; கைதான இருவருக்கும் விளக்கமறியல் | தினகரன்

வாத்துவ ஹோட்டல் சம்பவம்; கைதான இருவருக்கும் விளக்கமறியல்

வாத்துவ ஹோட்டல் சம்பவம்; கைதான இருவருக்கும் விளக்கமறியல்-4 died Wadduwa party-2 arrested and remanded

 

வாத்துவ ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நால்வர் மரணமடைந்த் சம்பவம் தொடர்பில் கைதான இருவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (04) இடம்பெற்ற குறித்த வைபவத்தின் பின்னர் திடீர் சுகவீனமுற்ற நால்வர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (09), அந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த நிறுவனத்தின் உரிமையாளரின் கணவர் மற்றும் அந்நிறுவனத்தின் பிரச்சார உத்தியோகத்தர் ஆகியொர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த ஹோட்டலில் களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் அரசாங்க பகுப்பாய்வு அதிகாரியினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெறும்வரை, அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த நிகழ்வில் வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் வெளிநாட்டவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 1,500 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வு தொடர்பில், குறித்த நிறுவனம் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதோடு, இதற்காக சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வின் பாதுகாப்பு கடமைக்கு மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றை இந்நிறுவனம் அமர்த்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

 


Add new comment

Or log in with...