எடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் இராஜினாமா! | தினகரன்

எடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் இராஜினாமா!

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அவருக்கு மெரீனாவில் இடம் வழங்க மறுத்த எடப்பாடி அதிமுக அரசை கண்டித்து கூட்டுறவு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் 4 பேர் திடீர் இராஜினாமா செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் சேவகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த ஐந்து பேர் நிர்வாகிகளாக வெற்றி பெற்றனர். இதில் கடந்த மாதம் உடல் நலம் சரியில்லாமல் சத்தியமூர்த்தி இறந்து விட்டார். மீதியுள்ள மாசிலா பெலிப்ஸ், கணேசன், வள்ளிமயில், வள்ளியம்மாள் ஆகிய நான்கு பேர் நிர்வாகிகளாக இருந்தும் கூட பதவி ஏற்பு நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் தான் எடப்பாடி அரசு கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் வெற்றி பெற்ற திமுகவினர் நான்கு பேர் அப்பகுதியை சேர்ந்த சேவகம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று திடீரென தங்கள் இராஜினாமாவை அலுவலக அதிகாரியிடம் வழங்கினார்கள்.


Add new comment

Or log in with...