கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக மக்கள் அஞ்சலி | தினகரன்

கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக மக்கள் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்று இரவு முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் கிரனைட் கற்கள் பதித்த மேடை அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி தரைதளத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிரனைட் கற்களாலான மேடையின் மீது சூரிய வடிவில் பழங்கள் மற்றும் மலர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது நாளாக நேற்று காலையிலிருந்தே தொண்டர்களும் பொதுமக்களும் வரிசையில் நின்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் நினைவிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் விஜயகுமார் ஆகியோர் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மு.க .ஸ்டாலின் கூறி உள்ளார்.


Add new comment

Or log in with...