உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகம் வெற்றி | தினகரன்

உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகம் வெற்றி

காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக்கழகத்தின் ஐம்பதாவது நிறைவையொட்டி நடாத்தப்பட்ட உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஐம்பதாவது நிறைவையொட்டி அணிக்கு ஏழு பேர் கொண்ட உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி சவுண்டஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெற்று அதன் இறுதிப் போட்டி திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

பிகாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்தச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காத்தான்குடி பதுறியா விளையாட்டுக்கழகமும் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகமும் பங்கு பற்றியது.

இதில் பாலமுனை நெசனல் விளையாட்டுக்கழகம் ஒரு கோளை அடித்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எல்.இல்மி அகமட் லெவ்வை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எம்.நிப்லர், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான், இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி தலைவர் என்.ரி.பாறூக் மாவட்ட விளையாட்டு பயிற்சி உத்தியோகத்தர் எம்.வை.ஆதம் உட்பட சவுண்டஸ் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சவுண்டஸ் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள் பிரமுகர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...