ரிதிதென்ன பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிறிக்கெட் தொடர் | தினகரன்

ரிதிதென்ன பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் மென்பந்து கிறிக்கெட் தொடர்

ரிதிதென்ன பிர்லியண்ட் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ரிதிதென்ன பிரிமியர் லீக் ) மென் பந்து கிரிக்கட் சுற்றுச் தொடரின் இறுதிப் போட்டி ரிதிதென்ன பிர்லியண்ட் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் விஷேட அதிதியாக புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் கலந்து கொள்ள இருந்த போது அவசர வேலை நிமித்தம் காரணமாக கொழும்பு செல்ல இருந்ததனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமையால் இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அழைக்கப் பட்டிருந்த வாகரை வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிப் பதக்கம் வழங்கியதோடு வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கேடயமும் , காசோலையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு கிராம சேவை உத்தியோகத்தரும், பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகருமான எச்.எம். அஸ்கர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...