அலோசியஸ், பலிசேனவுக்கு ஓகஸ்ட் 23 வரை விளக்கமறியல் | தினகரன்

அலோசியஸ், பலிசேனவுக்கு ஓகஸ்ட் 23 வரை விளக்கமறியல்

அலோசியஸ், பலிசேனவுக்கு ஓகஸ்ட் 23 வரை விளக்கமறியல்-Arjun Aloysius Kasun Palisena Further Remanded Till Aug 23

 

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி கைதான குறித்த இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கு இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இதன்போது, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் மற்றும் டப்ளியூ.எம். மெண்டிஸ் உள்ளிட்ட கூட்டு நிறுவனங்கள் 5 இனது கணக்கு விபரங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்கு முன்னர், மத்திய வங்கியிடம் ஒப்படைக்குமாறும் நீதவன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...