ரயில் சாரதியின் மாத சம்பளம் ரூ.2 இலட்சம் | தினகரன்

ரயில் சாரதியின் மாத சம்பளம் ரூ.2 இலட்சம்

* 500 மணித்தியாலங்கள் OT
* எம்.பிக்களை விட சம்பளம் அதிகம்

பாராளுமன்ற உறுப்பினர்களைவிட அதிக சம்பளத்தைப் பெறும் ரயில் சாரதிகள் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். வேலைநிறுத்தம் தொடர்பில் எதிரணியினர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ரயில் சாரதிகளின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்படவில்லை. பொய்யான பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கு எதிரணியினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சரவைப் பத்திரம் எதுவும் நிராகரிக்கப்படவில்லை. மாறாக ரயில் சாரதிகள் உள்ளிட்ட சகல அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்புத் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான பொறுப்பை குழுவொன்றிடம் பொறுப்பளித்துள்ளோம்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...