தொற்றுநோய் பரவல்; ரஜரட்டவின் 3 பீடங்கள் பூட்டு | தினகரன்

தொற்றுநோய் பரவல்; ரஜரட்டவின் 3 பீடங்கள் பூட்டு

தொற்றுநோய் பரவல்; ரஜரட்டவின் 3 பீடங்கள் பூட்டு-Rajarata University 3 Faculties Closed until August 26

 

தொற்று நோய் பரவல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலையிலுள்ள மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமூகவியல் மானிட விஞ்ஞானம், முகாமை மற்றும் வர்த்தக கற்கை, விஞ்ஞான தொழில் நுட்பப் பிரிவு என்பனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தவர்களில் சிலருக்கு அம்மை நோய்த்தாக்கம் காணப்பட்டதாலேயே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

44 மாணவர்கள் அம்மை நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலருக்கு வைரஸ் காய்ச்சல், மற்றும் வயிற்றுப் போக்கு என்பன காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 27 ஆம் திகதி விடுதிகளுக்கு திரும்புமாறு உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

(அக்குறணை குறூப் நிருபர் - ஜே.எம். ஹபீஸ்)

 


Add new comment

Or log in with...