குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் நிறைவேற்றம் | தினகரன்

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் நிறைவேற்றம்

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் நிறைவேற்றம்-Mutual Assistance in Criminal Matters Reform Bill Passed by 64 Votes

 

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூலம், 64 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்ட மூலம் நேற்று முன்தினம் (07) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வாக்கெடுப்பிற்கு விடுவதற்கான நேரம் போதாமை காரணமாக, இன்று அதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதற்கமைய, இத்திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாக்கெடுப்பில், அச்சட்டமூலத்திற்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் வழங்கப்பட்டதற்கமைய, 64 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குழு நிலை திருத்தத்திற்கான, வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில், அவ்வாக்கெடுப்பில் அவர்கள் தோல்வியடைந்தனர்.

அதன் பின்னர், திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், விமல் வீரவங்சவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டதற்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

(பாராளுமன்றத்திலிருந்து மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...