யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி! | தினகரன்

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி!

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured

 

ஹபரணையில் சம்பவம்

கொழும்பிலிருந்து கிண்ணியாவின் மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹபரணை காட்டுப் பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்றிரவு (08) இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக  ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured

சம்பவத்தில் கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் நவீத், எனும் 27 வயது நபர் ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured

யாருமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் குறித்த நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured

ஹபரணைக்கும், ஹத்தரஸ் கொட்டுவவிற்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வேன் வேகமாக சென்றதன் காரணமாக வீதியில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கந்தளாய் தினகரன் நிருபர் - எப்.முபாரக்)
 


Add new comment

Or log in with...