பயணிகள் ஆவேசம்; வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் | தினகரன்

பயணிகள் ஆவேசம்; வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றம்

முன்னறிவித்தலின்றி இன்று (08) திடீரென முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தால் பாதிப்புற்ற ரயில் பயணிகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியை முழுமையாக மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் ரயில் வேலை நிறுத்தத்தால் பாதிப்புற்ற தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகளே வீதியை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு மேலும் பொலிஸ் பதிக்காப்பு அதிகரிக்கப்பட்டதுடன், பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இப்போராட்டம் இருந்ததால் இரு தரப்பினருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால் கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் ரயில் சேவை பணி புறக்கணிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து போக்குவரத்து அமைச்சு, புதிய அறிவித்தலையும் விடுத்துள்ளது.

அந்தவகையில் புகையிரத பருவ சீட்டுள்ளோர் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினை உட்பட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில்வே ஊழியர்கள் திடீரென பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூர இடங்களுக்குச் செல்லும் ரயில் பயணிகள் பெரும் அசௌரிகங்களை எதிர் கொண்டதுடன் ரயில் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான சூழ்நிலை உருவானது.

ரயில் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரமணாக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் அதன் வீதி அனுமதிப்பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில் ஈடுட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே வேலை நிறுத்தம் நிறைவு பெறும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை எந்நேரமும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...