Wednesday, April 24, 2024
Home » முச்சக்கரவண்டிகளுக்கு மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பம்

முச்சக்கரவண்டிகளுக்கு மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பம்

by sachintha
November 23, 2023 10:59 am 0 comment

Lanka E-Mobility Solutions (Private) Limited (LeMS) நிறுவனத்தின் துணையுடன் இலங்கையில் 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது தூய்மையான மற்றும் கட்டுப்படியான போக்குவரத்து தீர்வு கிடைக்கின்றது. உள்நாட்டில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு ‘e-wheel’ என்ற வர்த்தக நாமத்துடன் முச்சக்கரவண்டிகளுக்கு மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதுமையான பேட்டரியை மாற்றும் தொழில்நுட்பத்தின் பயனாக முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவர் செலவுமிக்க பேட்டரியை கொள்வனவு செய்யவோ அல்லது பேட்டரியின் பாவனைக்காலம் முடிவடைந்த பின்னர் அதற்குப் பதிலாக புதிய பேட்டரியொன்றை மாற்றுவது தொடர்பிலோ கவலைப்படத் தேவையில்லை என்பதுடன், மேற்குறிப்பிட்ட பேட்டரியை மாற்றும் தொழில்நுட்பம் வெறும் இரு மணித்தியாலங்களில் மேற்கொள்ளக்கூடிய ஒரு இலகுவான வழிமுறையாகும்.

மின்சாரத்தால் இயங்கும் எந்தவொரு வாகனத்தைப் பொறுத்தவரையிலும் பேட்டரியே மிகவும் செலவான பாகமாகக் காணப்படுவதுடன், பெற்றோலில் இயங்கும் முச்சக்கரவண்டியொன்றை e-wheeler ஆக மாற்றும் போது, பேட்டரிகளுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் உரிமையாளர் மேற்கொள்ளத் தேவையில்லை.

நிலைபேணத்தகு போக்குவரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், காபன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ஆபத்தான வளி மாசடைதலுக்கு எதிராகப் போராடுதல் ஆகியவற்றுக்கான அவசர தேவையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை இதன் ஸ்தாபகர்கள் முன்னெடுத்துள்ளனர். “திகைப்பூட்டும் வகையில் இலங்கையில் தற்போது 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகள் தினந்தோறும் 5.5 மில்லியன் லீட்டர் பெட்ரோலை நுகர்ந்து வருவதுடன், ஒவ்வொரு ‘e-wheel’ உம் இந்த தொகையை குறைக்க உதவும். குடும்பத்தின் செலவுகளை கவனிப்பதற்காக பெரும்பாலும் ஒரே உழைப்பாளராகவுள்ள e-wheel ஓட்டுனர், வெறும் ரூபா 450,000 முதலீட்டுடன் மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட ரூபா 20,000 தொகையை தற்போது சேமிக்க முடியும்,” என்று LeMS இன் முகாமைத்துவப் பணிப்பாளரான சமிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT